Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம்- சுகாதார அமைச்சு தீர்மானம்!

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம்- சுகாதார அமைச்சு தீர்மானம்!

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 08, 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி 14 மாவட்டங்களுக்குட்பட்ட 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக பொலிஸார் மற்றும் முப்படைகளின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும் என தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பரவும் அதிக அபாயம் உள்ள பகுதிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter