ஹொரணை – அங்குருவாதொட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள ‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்தின் போது முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்தனர் என்பதுடன், தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 10 பேர் கட்டிடத்திற்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.
தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்தார்.
அதன்படி முன்தினம் (3) ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.