கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
27 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (27) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.