Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மொரகல்ல கடற்கரையில் ஒதுங்கிய மனித தலை- பொலிஸார் தீவிர விசாரணை!

மொரகல்ல கடற்கரையில் ஒதுங்கிய மனித தலை- பொலிஸார் தீவிர விசாரணை!

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (23) காலை அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த மனித தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு ஆணின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது அடையாளம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter