Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை செப்டம்பர் மாதம் வரை உயர்த்தப் போவதில்லை- எரிசக்தி அமைச்சர்!

மின்சாரக் கட்டணத்தை செப்டம்பர் மாதம் வரை உயர்த்தப் போவதில்லை- எரிசக்தி அமைச்சர்!

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மின்சாரக் கட்டணம் மேலும் உயருமா என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

ஆனால், இந்த விலை அதிகரிப்பின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மற்றவர்களின் சுமையை அரசாங்கம் 15 பில்லியன் ரூபாவை மின்சார சபைக்கு வழங்கி தாங்கிக்கொண்டுள்ளது.

என்னால் ஒரு நேரடிப் பதிலைச் சொல்ல முடியும். செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்க உத்தேசிக்கவில்லை- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter