யாழ் மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு சைவத்திற்கும், தமிழுக்கும் செய்து வரும் சேவையின் ஒரு பகுதியாக ‘நல்லூர் முருகன்’ ஆலய உற்சவ காலத்தில் “நல்லைக் குமரன்” மலர் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டு 34ஆவது மலரினை வெளியிடுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதற்காக யாழ் மாநகர சபை சைவ சமய விவகாரக்குழுவினால் வெளியிடப்படும் நல்லைக்குமரன் 34ஆவது மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.
அதன்படி ஆக்கங்களை அனுப்பும்போது,
1.ஆக்கங்கள் தழிழ் மொழியில் அமைய வேண்டும்.
2.கட்டுரைகள் 5-7 பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும்.
3.ஏற்கனவே நல்லைக் குமரன் மலரில் வெளிவந்த, வேறு நூல்களில் வெளிவந்த ஆக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
4.முடிவுத் திகதி: 25.06.2026 (பிந்திக்கிடைக்கும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
5.மின்னஞ்சல் முகவரி : Nallaikumaranbook@gmail.com
6.ஆக்கங்களை மின்னஞ்சல் மூலம் / இறுவட்டுக்கள் மூலம் அனுப்புவது அவசியமாகும். மென் பிரதியாக அனுப்பப்படாத ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
7.தங்களது முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்படல் அவசியம்.
ஆகிய விடயங்களை கருத்தில்கொண்டு தமது ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இந்த தகவலை ஆணையாளரும் சைவ சமய விவகாரக்குழு தகைவருமான ச.கிருஷ்னேந்திரன் அறிவித்துள்ளார்.