Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமாகியுள்ள 42 பழங்கால ஓவியங்கள்!

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமாகியுள்ள 42 பழங்கால ஓவியங்கள்!

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இன்றைய (21) நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பின்னரே, காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி இருப்புப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோதிலும், தற்போது கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மாத்திரமே உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter