Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து பயணம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து பயணம்!

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்.- 403 (UL- 403) என்ற விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர்கள் தமது பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter