Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

எல்ல பகுதிக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் கைது!

எல்ல பகுதிக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் கைது!

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை இழைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாலி-எல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்களில் ஒருவர் ஒரு இளம் ஜோடியை அச்சுறுத்தி, அங்கிருந்த யுவதியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளதோடு, மற்றுமொரு ஜோடியிடமிருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும் கொள்ளையடித்துள்ளார்.

அத்துடன் மேலும் பல ஜோடிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள் மற்றும் பல்வேறு சொத்துக்களை இவர்கள் கொள்ளையடித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter