யாழ்ப்பாண மாநகரசபையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் படுகொலை நினேந்தல் நினைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரின் முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது, சபா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நினைவுப் படத்தின் முன்பு ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு, உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர்.
எனினும் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநானகக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.