Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் விதிக்கப்பட்ட வரிகள் நியாயமற்றவை என தீர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் விதிக்கப்பட்ட வரிகள் நியாயமற்றவை என தீர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அண்மையில் விதிக்கப்பட்ட 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதியின் இறக்குமதி வரி உத்திக்கு அமெரிக்க மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1970-களின் வர்த்தகச் சட்டத்தின் கீழ், அவர் அண்மையில் விதித்த 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் இதன் பலன் இரண்டு தனியார் இறக்குமதியாளர்களுக்கும் மற்றும் வொஷிங்டன் மாகாணத்திற்கும் மட்டுமே பொருந்தும் என நீதிமன்றம் தடுத்துள்ளது.

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் 2-1 என்ற அடிப்படையிலான இந்தத் தீர்ப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் முடியும் வரை மற்ற அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் இந்தத் தற்காலிக வரிகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த வரிகள் ஜூலை மாதத்தில் காலாவதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய இரண்டு மாதங்களில் காலாவதியாக உள்ள வரிகளுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தினாலும், ட்ரம்பின் உலகளாவிய வரி இலட்சியங்களுக்கு இது மற்றொரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பெய்ஜிங்கில் வர்த்தகப் பதற்றங்கள் குறித்து ட்ரம்ப் கலந்துரையாட உள்ள நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் ட்ரம்ப் விதித்த விரிவான உலகளாவிய வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், பில்லியன் கணக்கான டொலர் வரி திரும்பப்பெறுதல் தொடர்பாக மற்றொரு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு இந்தத் தீர்ப்பு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

வர்த்தக நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு இரண்டு தீவிர இடதுசாரி நீதிபதிகளே காரணம் என ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

பகிர்க: Facebook Twitter