Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று!

2026ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாய்மூலக் கருத்துக்கேட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டின் 2ஆம் மற்றும் 3ஆம் காலாண்டுகளுக்காக நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர் (தனியார்) நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இவ்வாறு பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் தொடர்பான தீர்மானம் மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter