Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வியட்னாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

வியட்னாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்னாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இலங்கைக்கான அரச விஜயமொன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி, பல துறைகளை உள்ளடக்கியதாக குறித்த அரச விஜயத்தின் போது கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையின் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் கலாச்சார ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் இனத்துவ மற்றும் சமய விவகார அமைச்சுக்கும ; இடையில் சமய அபிவிருத்தி, சமய மாணவர் நலனோம்புகை, சமய நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங ;கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கும் இடையில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப துறைகளில் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் பொது பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பகிர்க: Facebook Twitter