பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லாகுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வயலில் உள்ள மரமொன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த வாடியில் இருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.