Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நாட்டிற்கு 8 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

நாட்டிற்கு 8 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் பதிவாகியுள்ளன.

இது 2024 மற்றும் 2018 ஆகிய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது.

எவ்வாறாயினும், 2026 மார்ச் மாதத்தில் இந்த நேர்மறையான போக்கில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகை 183,979 ஆகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே இந்தத் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில் 117,893 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் நிறைவடையும் போது சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 858,527 ஐ எட்டியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும் என அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பகிர்க: Facebook Twitter