Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

“மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி” என்ற கருப்பொருளின் கீழ் மே தினப் பேரணிகள் ஆரம்பம்!

“மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி” என்ற கருப்பொருளின் கீழ் மே தினப் பேரணிகள் ஆரம்பம்!

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

“மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி” என்ற கருப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களை நடத்துகிறது

நுவரெலியா மாவட்ட மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.

சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பு ஹென்றி பேத்ரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் தமது மே தினப் பேரணியை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த வருட மே தினக் கூட்டத்தை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்தவுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியினர் தமது மே தினப் பேரணியை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter