தெற்கு அதிவேக வீதியின் களனிகம – தொடங்கொட இடையே 17 கி.மீ – 19 கி.மீ மற்றும் 28 கி.மீ – 30 கி.மீ ஆகிய இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்ட மாத்தறை நோக்கிய பாதையில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் மாத்தறை நோக்கிச் செல்லும் வாகனங்கள், கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையின் இரண்டு ஒழுங்கைகளை இருபுறமும் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் பயன்படுத்திப் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதுடன் விபத்துக்களும் நிகழக்கூடும்.
இதனால் இப்பகுதியூடாகப் பயணிக்கும் போது மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.