Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

எம்.பி அர்ச்சுனா அதிரடி கைது!

எம்.பி அர்ச்சுனா அதிரடி கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் சற்றுமுன்னர் (27) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், இளவாலை – பெரியவிளான் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, எம்.பி அர்ச்சுனா துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்த நிலையிலேயே எம்.பி அர்ச்சுனா தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்க: Facebook Twitter