கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டன் பகுதியில் தீர்வை வரி இன்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 540 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 35 வயதுடைய சீன நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.