Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நதிகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!

நதிகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணமாக, அதிகரித்திருந்த நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் நில்வளா ஆறு, கிங் ஆறு, களு ஆறு மற்றும் அத்தனகலு ஓயா போன்ற நதிகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

குறிப்பாக களுகங்கையின் மில்லகந்தை தவிர்ந்த ஏனைய இடங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மழைவீழ்ச்சி குறைவினால் இந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதால் இது ஒரு தற்காலிக நீர்மட்டக் குறைபாக இருக்கலாம் என்றும் கூறினார்.

தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 18 நீர்த்தேக்கங்களும், 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருகின்றன.

எவ்வாறாயினும் இந்த நீர் வெளியேற்றம் பெரிய அளவிலான வெள்ள அபாயத்தை ஏற்படுத்தாது எனவும், நிலைமைகளை அவதானித்து செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் திறக்கப்பட்டிருந்த அனைத்து வான் கதவுகளும் இன்று (14) காலை 7.00 மணியளவில் மூடிவிடப்பட்டுள்ளதாக வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

பகிர்க: Facebook Twitter