கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர என்ற நபரே, கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.