Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுனில் சாந்தவை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுனில் சாந்தவை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் இந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

இது தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவிடம் வினவிய போது, அதற்குப் பதிலளித்த பேராசிரியர் சுனில், இந்த நீக்கம் குறித்து தனக்கு இதுவரை எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என டெஹ்ரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter