Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கணினி குற்றங்களில் ஈடுபட்ட 23 வெளிநாட்டவர்கள் கைது!

கணினி குற்றங்களில் ஈடுபட்ட 23 வெளிநாட்டவர்கள் கைது!

கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது காலி துறைமுகம், மாகல்ல மற்றும் சம்போதி சந்தி ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களிடம் இருந்து 10 கணினிகள் மற்றும் 32 கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter