கெக்கிராவ, கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரிமெட்டியாவ குளத்தில் குர்தா இளைஞனும் மேலும் ஐந்து பேரும் படகு ஓட்டிச் சென்ற வேளையில், படகு கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.