வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நேற்று (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றையதினம் (08) வியட்நாம் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.