Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதனை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மே 7 மற்றும் 8ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மே 7ஆம் திகதி இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வியட்நாம் ஜனாதிபதியின் கொழும்பு நோக்கிய வருகையின் போதும், மே 8ஆம் திகதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களுக்கான உத்தியோகபூர்வ பயணங்களின் போதும் இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்ட நேரங்களில் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம்.

வியட்நாம் ஜனாதிபதியின் வருகைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் குறித்த வழிகளில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை விதிக்கப்படும்.

ஜனாதிபதியின் வாகனத் தொடரணி கடந்து செல்லும் போது ஏனைய வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இதேவேளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter