Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் 11 பேரும் பாதுகாப்பாக மீட்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் 11 பேரும் பாதுகாப்பாக மீட்பு!

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்று இரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.

அனர்த்தத்திற்குள்ளான படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில் அவர்களை மீட்கும் பணிகளை கடற்படை ஆரம்பித்திருந்தது.

இந்தநிலையில் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களையும் நீண்ட முயற்சியின் பின்னர் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்க: Facebook Twitter