அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது.
மழை பெய்யத் தொடங்கிய வேளையில், வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்தால் வீட்டின் உள்ளே பரவிய தீயைப் பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் உபகரணங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.