Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழப்பு- புங்குடுதீவு பகுதியில் சம்பவம்!

குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழப்பு- புங்குடுதீவு பகுதியில் சம்பவம்!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு, 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 67 வயதுடைய கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்று முன்தினம் (29) புங்குடுதீவு காட்டுப் பகுதிக்கு பனை வெட்டுவதற்காகச் சென்ற வேளையில், கருக்குளவி தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த குறித்த நபரை, அவரது மகன் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

அவரது உடற்கூற்று பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பகிர்க: Facebook Twitter