Monday, 27 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நிலாவெளி கடலில் மூழ்கி உயிரிழப்பு!

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நிலாவெளி கடலில் மூழ்கி உயிரிழப்பு!

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நிலாவெளிப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter