Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- 53 டெங்கு மரணங்களும் பதிவு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- 53 டெங்கு மரணங்களும் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு நேற்று (19) இரவு விடுத்திருந்த புதிய அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

2026ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter