Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக் கோரி போராட்டம்!

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக் கோரி போராட்டம்!

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக் கோரி இன்று (13) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததுடன், அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியானவர்களுக்கு நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
“நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”,
“அநுர ஆட்சியில் அநீதியா?”
முதலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter