கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகரகம, புகையிரத வீதிப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேகொள்ளப்பட்ட சுற்றிவழிப்பின் போது, மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத வீதிப் பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை நேற்று (12) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.