Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை அச்சுறுத்திய சம்பவம்- ஆரம்பிக்கப்பட்டுள்ள தீவிர விசாரணை!

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை அச்சுறுத்திய சம்பவம்- ஆரம்பிக்கப்பட்டுள்ள தீவிர விசாரணை!

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, கல்முனை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று (09) இடம்பெற்றுள்ளது.

இது விவகாரம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, கல்முனை மாநகர சபைப் பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நௌபீஸ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கடமைக்குச் சமூகமளித்திருந்த போதிலும், ஊழியர் ஒருவர் தனக்குரிய கடமைகளை முறையாகச் செய்யவில்லை என்ற விடயத்தைப் பதில் ஆணையாளர் கண்டறிந்து, இது தொடர்பாகக் குறித்த ஊழியரை அவர் நேரில் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

அந்த வேளையில் தம்மைக் கேள்வி கேட்ட பதில் ஆணையாளரை அச்சுறுத்தும் பாணியில் குறித்த ஊழியர் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், கல்முனை பொலிஸ் நிலையப் பல்வேறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter