Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி- 7ஆவது முறையாகவும் அவுஸ்திரேலியா அணி சாம்பியன்!

மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி- 7ஆவது முறையாகவும் அவுஸ்திரேலியா அணி சாம்பியன்!

மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 7ஆவது முறையாக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர்.

கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord’s) மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலியாவுக்கு ஓரளவு கடினமான இலக்கை நிர்ணயித்தது.

151 எனற இலக்கை நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியா அணி, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைக் கடுமையாகத் தாக்கி, போட்டியின் முழுமையான கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தியது.

அதன்படி அவர்கள் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில், போட்டியின் 18ஆவது ஓவரில் (17.1 ஓவர்கள்) தங்களது இலக்கை வெற்றிகரமாகக் கடந்து வெற்றியைப் பதிவு செய்தனர்.

பகிர்க: Facebook Twitter