Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர்- இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர்- இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (2) இடம்பெற்றது.

இந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 170 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 40 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter