கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளையில் அப்பகுதி மக்கள், பொலிஸார் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் இணைந்து காயமடைந்த பயணிகளை மீட்டு தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயமடைந்த 42 பேரில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமடைந்ததால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.