ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்டார்.
இதன்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த அதிபர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் ஆகிய மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அதிபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.