அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் நேற்றையதினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவேளையில் ஜெனரல் கெவின் ஷ்னைடர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படைகளைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் வான் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு இணைய பாதுகாப்பு, அனர்த்தங்களின் போது செயற்பட வேண்டிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.