மீடியாகொட, எரணவில பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரணவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து 750 கிராம் ஹெரோயின்மற்றும் 1 கிலோகிராம் 115 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்தவாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.