Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நெல்லுக்கு நியாய விலை கோரி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

நெல்லுக்கு நியாய விலை கோரி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

நெல்லுக்கு நியாய விலை கோரி கிளிநொச்சி விவசாயிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

தற்போது அரசாங்கமானது ஒரு கிலோ நெல்லை 120 ரூபா கொள்வனவு செய்கின்றது. இது உற்பத்தி செலவுக்கு போதுமானதாக இல்லை எனவும் 135 ரூபாவுக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம், ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், விவசாய அமைச்சர் உள்ளிட்டோருக்கு கையளித்திருந்தனர்.

பகிர்க: Facebook Twitter