Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசு ஒருபோதும் நிற்காது- வட மாகாண ஆளுநர்!

சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசு ஒருபோதும் நிற்காது- வட மாகாண ஆளுநர்!

சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசு ஒருபோதும் நிற்காது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் நேற்றையதினம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நான் மாவட்ட செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் பொலிஸார் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றேன். குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகள் ஏற்கப்படுவதில்லை எனவும், தமக்குத் தீங்கிழைத்த குற்றவாளிகளுடன் பொலிஸார் நட்பாகப் பழகுவதாகவும் மக்கள் முறையிட்டிருந்தனர்.

ஆனால் இன்று அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு வழங்கிவரும் உறுதியான தலைமைத்துவமே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். இருப்பினும் இத்துறையில் இன்னமும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளை நான் பாராட்டுகின்றேன். தங்களால் முடியுமானளவு சிறப்பான சேவைகளைத் தற்போது வழங்கி வருகின்றார்கள். எமது வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்திருந்த வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைக் கலாசாரம் இன்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தல்களால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக நானும், அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சந்திரசேகரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்திருந்தோம்.

இதன்போது ‘கடந்த காலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல்வாதிகள் எம்மைத் தேடி வருவார்கள், ஆனால் நீங்களோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளீர்கள்’ என அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அதுதான் உண்மை. சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசு ஒருபோதும் நிற்காது- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter