Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கூர்மையான ஆயுதத்தால் தாக்கி மனைவியை படுகொலை செய்த கணவனுக்கு நேர்ந்த கதி!

கூர்மையான ஆயுதத்தால் தாக்கி மனைவியை படுகொலை செய்த கணவனுக்கு நேர்ந்த கதி!

பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படிவெல பகுதியிலேயே வசிந்து வந்த 61 வயதுடைய பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (10) காலை வேளையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த 59 வயதுடைய சந்தேக நபரான கணவனை பிங்கிரிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

எனினும் கைது செய்யப்படும் போது சந்தேக நபருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter