பொத்துவில் – பாணம வீதியின் பசரச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வருடங்களும் 10 மாதங்களும் வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சிறுவனும் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.