யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புத்தூரைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், திடீரெனக் குறுக்கே சென்ற முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியின் மீது ஏறியதில், அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களின் கால்களும் நசுங்கிப் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 21 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.