Friday, 23 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணையில் செல்ல அனுமதி!!

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணையில் செல்ல அனுமதி!!

இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 4 இலஞ்ச முறைப்பாடுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது செயலாளரை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதற்கமைய, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.

அதன் பின்னர், இந்த வழக்குகளை ஜனவரி 26ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை பொஸ்பேட் ஏற்றுமதிக்கான உரிமங்களை வழங்குவதற்காக மூன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது செயலாளரின் பிணைக்கோரிக்கையை இன்று நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களை நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பகிர்க: Facebook Twitter