Friday, 23 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற விசேட தூதுக்குழு சவூதிக்கு!

அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற விசேட தூதுக்குழு சவூதிக்கு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ள குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்வாங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த விசேட தூதுக்குழு சவூதி அரேபிய மன்னரைச் சந்திக்கவுள்ளது.

இதன்போது சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொது மன்னிப்பை வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பி வைக்கப்படும் கடிதத்தையும் அந்தக் குழு சவூதி அரேபிய மன்னரிடம் கையளிக்கவுள்ளது.

அதேநேரம் சிவராசா அனோஜன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகச் சட்டரீதியாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளமையினால், அவரது வழக்கிற்காக இதுவரை ஏற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் எனக் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் அவரது குடும்பத்தினரிடமிருந்து மேன்முறையீட்டிற்காகப் பெறப்பட்டிருந்த பணமும் மீண்டும் கையளிக்கப்படும் என்றும், அவரை விடுவிப்பதற்கான அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter