ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று (11) மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.