Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

1000 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது!

1000 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான நபரிடம் இருந்து 1000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter