Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அனுராதபுர நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாஅபராதம்!!

அனுராதபுர நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாஅபராதம்!!

இலங்கை தரச்சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார வயர் சுருளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த அனுராதபுர நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் அனுராதபுரம் 11ஆம் வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சார வயர் சுருள் போன்ற மின் சாதனங்களுக்கு உரிய தரநிலைகளைப் பின்பற்றுவது நுகர்வோர் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும்.

தரமற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவது மின்சாரம் தாக்குதல், மின் கசிவு மற்றும் தீ விபத்துக்கள் போன்ற ஆபத்துக்களை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, பல்பொருள் அங்காடி அல்லது பிற கடைகளில் மின்சார வயர் வாங்கும்போது, உரிய SLS தரச்சின்னம் மற்றும் ஏனைய குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பரிசீலித்து பொருட்களை வாங்குமாறு நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மேலும், இவ்வாறான சட்டமீறல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter